கார் மற்றும் பைக் ரேசிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார், சமீபத்தில் ‘AK Racing’ என்ற தனது சொந்த பந்தய அணியைத் தொடங்கினார். இப்போது இந்த அணியுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளது எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

AK ரேஸிங் அணியின் விளம்பரத் தூதராகவோ அல்லது ஒரு முக்கிய அங்கமாகவோ சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.ஏற்கனவே அஜித்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன், தற்போது அவரது கனவுத் திட்டமான ரேஸிங் அணியில் இணைந்திருப்பது இரு தரப்பு ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறவுள்ள சர்வதேச ரேசிங் போட்டிகளில் AK ரேஸிங் அணி பங்கேற்க உள்ள நிலையில், எஸ்கே-வின் வருகை இந்த அணிக்கு கூடுதல் பலத்தையும், விளம்பரத்தையும் தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.