உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆம்ரபாலி கோல்ப் ஹோம்ஸ் குடியிருப்பில், வளர்ப்பு நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kalesh over dog at Amrapali Golf Homes, Greater Noida West 🐕 pic.twitter.com/wSF82WxlDa
— Greater Noida West (@GreaterNoidaW) February 3, 2026
பொது இடத்தில் நாயை அழைத்து வந்ததற்கு மற்றொரு பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாயுடன் வந்த பெண் ஆபாசமான வார்த்தைகளால் வசைபாடியதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இது தொடர்பாக சுவாதி என்பவர் அளித்த புகாரின் பேரில் பிஸ்ராக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நொய்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வளர்ப்பு நாய்கள் தொடர்பான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலங்குகளை வளர்ப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
