உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையின் போது, ஜியாமாவ் மேம்பாலத்தின் அடியில் மழையிலிருந்து தப்பிக்க ஒதுங்கிய வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழையின் வேகம் அதிகமாக இருந்ததால், மேலே செல்ல முடியாமல் பாதுகாப்பு கருதி மக்கள் தங்கள் வாகனங்களைச் சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்தனர். ஆனால், மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத போலீஸார், போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி ஆன்லைன் மூலம் அவர்களுக்குச் சரமாரியாகச் சலான் அனுப்பி அபராதம் விதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மாநில டிஜிபி அலுவலகத்திற்கு மிக அருகிலேயே நடந்துள்ளது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. “மழையில் ஒதுங்குவது குற்றமா?” என்றும், காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளாமல் பண வசூலிலேயே குறியாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
बारिश से बचने को रुकी गाड़ियां, राहत नहीं… चालान मिला!
लखनऊ के जियामऊ पुल का वीडियो वायरल। #LucknowNews #lucknowrain #lucknowPolice pic.twitter.com/7YtakaFBaJ— Newstrack (@newstrackmedia) February 3, 2026
“>
விஐபி பகுதியிலேயே இப்படி ஒரு நிலை என்றால், மற்ற பகுதிகளில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
