மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ விளையாட்டுப் போட்டிகள் கடந்த 100 நாட்களாக நடைபெற்று வந்தன.
இதன் நிறைவு விழா நேற்று (பிப். 2) நடைபெற்ற நிலையில், இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின் ஒரு பகுதியாக மைதானத்தில் இறங்கி கிரிக்கெட் விளையாடிய சிவ்ராஜ் சிங் சௌகான், பேட்டிங் செய்யத் தயாரானார். அப்போது ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை எதிர்கொண்ட அமைச்சர், யாரும் எதிர்பாராத விதமாக அதனைத் தடுத்து ஆடாமல், ஒரு மெகா ஷாட் அடித்து சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார். அரசியல் களத்தில் ஜாம்பவானாகத் திகழும் அமைச்சரின் இந்த அதிரடி பேட்டிங்கைக் கண்டு வியந்த ஜடேஜா, கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினார்.
सांसद खेल महोत्सव के समापन समारोह के दौरान एक दिलचस्प नजारा देखने को मिला, जब भारतीय क्रिकेटर रवींद्र जडेजा ने केंद्रीय मंत्री शिवराज सिंह चौहान को गेंदबाजी की। इस दौरान शिवराज सिंह चौहान ने जडेजा की गेंद पर शानदार शॉट लगाकर सभी को चौंका दिया।#RavindraJadeja #Jadeja… pic.twitter.com/BBQB8KbtzL
— NBT Hindi News (@NavbharatTimes) February 3, 2026
“>
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் அரசியல் பிட்ச்சில் மட்டுமல்ல, கிரிக்கெட் பிட்ச்சிலும் கில்லாடி தான்” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
