தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப். 2) பனையூரில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், “தமிழகத்தில் வீட்டுக்கு வீடு தவெக வாக்காளர்கள் உள்ளனர்” என அக்கட்சியின் தலைவர் விஜய் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
விஜய்யின் இந்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது பாணியில் கிண்டலாகப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசுகையில், “விஜய் சொல்வது போல வீட்டுக்கு வீடு அவரது ஆட்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரும் ஓட்டுரிமை இல்லாத சிறுபிள்ளைகள் தான். சிறுவர்கள் வேண்டுமானால் விஜய் படத்தைத் தங்களது பைகளில் வைத்துக் கொண்டிருக்கலாம்; ஆனால், ஓட்டுரிமை உள்ள முதிர்ச்சியான வாக்காளர்கள் அனைவரும் என்றென்றும் அதிமுக பக்கமே உள்ளனர்” என்று சாடினார்.
மேலும், சினிமா செல்வாக்கைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற விஜய்யின் கணக்கு 2026-இல் பலிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
