உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக பக்கவாதம் காரணமாக எச். ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலறிந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று மருத்துவமனைக்கு விரைந்து சென்று எச். ராஜாவைச் சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த ரஜினிகாந்த், எச். ராஜா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று அவரது குடும்பத்தினருக்குத் நம்பிக்கையூட்டும் வகையில் ஆறுதல் கூறினார்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எச். ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
