அதிமுகவின் ஓ. பன்னீர்செல்வம் அணி (OPS) அரியலூர் மாவட்டச் செயலாளர் அன்பு, தனது ஆதரவாளர்கள் சுமார் 150 பேருடன் இன்று திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் இவர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். எதிர்வரும் தேர்தல் மற்றும் கூட்டணி விவகாரங்களில் முடிவெடுக்க ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து தாமதம் காட்டி வருவதால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள், அடுத்தடுத்து திமுக, அதிமுக (ஈபிஎஸ் அணி) மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.

மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது அவரது அணியின் பலத்தை அரியலூர் மாவட்டத்தில் கேள்விக்குறியாக்கியுள்ளது.