நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இஷான் கிஷனின் அதிரடி சதத்தின் உதவியுடன் 271 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து வீரர்கள் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 131 ரன்கள் குவித்தாலும், அடுத்தடுத்த ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் அந்த அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை அடுத்து, இந்திய அணி மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்தது.
