கடந்த ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவின் போது ஒரு பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது அங்கு கூடியிருந்த மற்ற பெற்றோர்கள் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, ஒரு தந்தை மட்டும் தனது பழைய மாடல் கீபேட் போனில் தனது மகளின் நடனத்தை மிகவும் கவனமாகப் பதிவு செய்தார்.
“இந்தச் சிறிய போனில் அவர் சேமிப்பது வெறும் வீடியோவை அல்ல, தனது மகளின் வாழ்நாள் சாதனையை” என நெட்டிசன்கள் உருகி வருகின்றனர்.
View this post on Instagram
குழந்தைகளின் கல்விக்காகவும் தேவைக்காகவும் தங்களது ஆசைகளைத் தியாகம் செய்யும் கோடிக்கணக்கான இந்தியத் தந்தையர்களின் பிரதிபலிப்பாக இவர் பார்க்கப்படுகிறார்.
இந்தத் தந்தையின் அன்பைப் பார்த்த பலர், அவருக்குப் புதிய ஸ்மார்ட்போன் வாங்கித் தர விரும்புவதாகவும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
