சமூக வலைதளங்களில் தற்போது ஒரு சிறுமி குறித்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளிக்குச் செல்ல பேக் வாங்க வசதி இல்லாத ஒரு ஏழைச் சிறுமி, வீட்டில் இருந்த பழைய கோதுமை மாவு பையை (Atta Flour Sack) எடுத்து, அதில் ஜிப் மற்றும் தோளில் மாட்டிக் கொள்ளும் பட்டைகளைத் தைத்து அழகான பள்ளிப் பையாக மாற்றியுள்ளார்.

“ஏழ்மை என்பது முன்னேற்றத்திற்குத் தடையல்ல” என்பதை இந்தச் சிறுமி தனது படைப்பாற்றல் மூலம் நிரூபித்துள்ளார். அந்தப் பையை அவர் மிகவும் பெருமையுடனும், புன்னகையுடனும் அணிந்திருப்பது பார்ப்பவர் நெஞ்சை நெகிழ வைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rubina (@not_that_typical_pti)

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “இவர்தான் இந்தியாவின் உண்மையான எதிர்காலம்” என்றும், “பிள்ளையைப் படிக்க வைக்கும் அந்தப் பெற்றோர்களுக்கு ஒரு சல்யூட்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தச் சிறுமியின் விவரம் தெரிந்தால் சொல்லுங்கள், அவருக்கு நல்ல ஸ்கூல் பேக் மற்றும் கல்வி உபகரணங்களை வாங்கித் தருகிறோம் என பல நல்லுள்ளங்கள் முன்வந்துள்ளனர்.