சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். திமுக அறிவிக்கும் மக்கள் நலத் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் எடப்பாடி பழனிசாமி அப்படியே காப்பி அடித்து தனது தேர்தல் அறிக்கையாகக் கொடுத்து வருவதாக அவர் சாடினார். “உங்களால் சொந்தமாக ஒரு திட்டத்தைக் கூட யோசிக்க முடியாதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.

​மேலும், 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் அதிமுக அளித்த பல முக்கிய வாக்குறுதிகளை அவர்கள் கடைசி வரை நிறைவேற்றவே இல்லை என்று குற்றம்சாட்டினார். “அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் தருவதாகச் சொன்னீர்களே, அது எங்கே? 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தருவதாகச் சொன்னீர்களே, அதையும் செய்யவில்லையே?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி எடப்பாடியாரை திணறடித்துள்ளார்.