தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள செர்லபள்ளியில் இன்று அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போடுப்பல் பகுதியைச் சேர்ந்த விஜயசாந்தி (38) என்ற பெண், தனது மகன் விஷால் ரெட்டி மற்றும் மகள் சேதனா ரெட்டி ஆகியோருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், சிதைந்த நிலையில் இருந்த அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இப்படி விபரீத முடிவெடுத்தது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தக் கொடூரமான முடிவுக்குக் குடும்பப் பிரச்சினையா அல்லது கடன் தொல்லையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த விஜயசாந்தியின் பின்னணி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். வாழ்ந்து காட்ட வேண்டிய வயதில் பிஞ்சு குழந்தைகளுடன் ஒரு தாய் தண்டவாளத்தில் உயிரை விட்ட சம்பவம், சமூக வலைதளங்களிலும் மக்களைக் கலங்க வைத்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் போலீஸ் விசாரணையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.