சமீபத்தில் சானியா மிர்சாவுடனான உரையாடலில், அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் பல ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார். அபிஷேக் சர்மா ஐபிஎல் போட்டிகளில் சொதப்பிக் கொண்டிருந்தபோது, யுவராஜ் அவரைத் தனது வீட்டிற்கு அழைத்து மதிய உணவு கொடுத்து ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னாராம்.

“நான் உன்னை ஐபிஎல் விளையாடுவதற்காகத் தயார் செய்யவில்லை, மாநில அணிக்காக விளையாடவும் ஊக்குவிக்கவில்லை. உன்னை இந்திய அணிக்காக விளையாடத் தயார் செய்கிறேன். நீ இந்தியாவுக்காகப் போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும். இதை இப்போதே எழுதி வைத்துக்கொள்!” என்று கூறி அபிஷேக் சர்மாவின் இலக்கை மாற்றியுள்ளார் யுவராஜ்.

யுவராஜின் ஆலோசனையின்படி, கடந்த 4 ஆண்டுகளாக அதிகாலை 4 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி, யோகா, நீச்சல் எனத் தனது வாழ்க்கை முறையையே மாற்றியுள்ளார் அபிஷேக். யுவராஜ் சிங்கின் ‘கடுமையான அன்புக்கு’  பயந்தே அவர் தனது பேட்டிங் நுட்பங்களைச் செதுக்கிக் கொண்டார்.