சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகளின் வினோதமான மற்றும் திகைப்பூட்டும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு ராட்சத மலைப்பாம்பையே உயிருடன் வேட்டையாடி உண்ணும் விலங்கின் வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பொதுவாக பாம்புகள் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதைப் பார்த்திருப்போம், ஆனால் இங்கே ஒரு சிறிய விலங்கு, தன்னை விடப் பல மடங்கு பெரிய மற்றும் ஆபத்தான மலைப்பாம்பை கொஞ்சமும் அச்சமின்றி கடித்துக் குதறும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயற்கையின் விதிகளுக்கு அப்பாற்பட்ட இந்த ஆக்ரோஷமான சண்டை, சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

“>

இந்த வீடியோவில், அந்த விலங்கு மலைப்பாம்பின் உடலைத் துண்டு துண்டாகக் கடித்து மிகவும் கொடூரமான முறையில் உண்பது தெளிவாகத் தெரிகிறது. மலைப்பாம்பு தப்பிக்க முயன்ற போதிலும், அந்த விலங்கின் பிடியிலிருந்து அதனால் மீள முடியவில்லை.

மேலும் பொதுவாக கீரி அல்லது அது போன்ற சிறிய வேட்டை விலங்குகள் பாம்புகளுடன் போரிடுவதைப் பார்த்திருப்போம், ஆனால் ஒரு உயிரினத்தை இவ்வளவு ஆக்ரோஷமாக அதுவும் உயிருடன் இருக்கும்போதே உண்பது பலருக்கும் ஒருவித அச்சத்தையும் ஆச்சரியத்தையும் தந்துள்ளதாக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.