தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை அரசியல் விஷயங்களில் பெரிய அளவில் தலையிடாமல் இருந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி, தவெக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே அவரது தற்போதைய விருப்பம். நீண்ட வரலாற்றைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, ஏதோ ஒரு கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டே இருப்பதால், தற்போது அந்தத் தனித்துவம் குறைந்து தேய்ந்து போய்விட்டதாக அவர் ஒரு விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.

​விஜய்யின் கட்சியுடன் காங்கிரஸ் கைகோர்த்தால், காங்கிரஸிற்கு மீண்டும் பழைய பலம் (Power) கிடைக்கும் என்றும், அதன் மூலம் இழந்த வரலாற்றைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் எஸ்.ஏ.சி தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் பயணம் சூடுபிடித்துள்ள இந்த வேளையில், அவரது தந்தையே முன்வந்து காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரும் தேர்தலில் புதிய திருப்பங்களை உண்டாக்குமா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.