சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோதமான காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், தற்போது இருட்டான சாலையில் மொபட் வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் செய்த அசாத்தியமான காரியம் இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. தெருவிளக்குகள் இல்லாத சாலையில் தனது வாகனத்தின் முகப்பு விளக்கு எரியாத சூழலில், அந்த நபர் ஒரு சிறிய டார்ச் லைட்டை வாயில் கவ்விக்கொண்டு அதன் வெளிச்சத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
View this post on Instagram
அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றொருவர் இந்த வினோதக் காட்சியைத் தனது அலைபேசியில் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளியைத் இதுவரை இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் விரும்பிப் பகிர்ந்துள்ளதோடு, இந்தியாவின் திறமைசாலிகளுக்குப் பஞ்சமில்லை என்றும், விளம்பரங்களில் வருவதைப் போலப் பற்களின் வெளிச்சத்திலேயே வண்டி ஓட்டுகிறார் என்றும் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
