கேரளாவில் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனருடன் இளம்பெண் ஒருவர் தகாத முறையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரத்தில் தற்போது மேலும் பல அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்மந்தப்பட்ட பெண்ணின் செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அதில் இதே போன்ற பாணியில் எடுக்கப்பட்ட மேலும் 7 வீடியோக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் வெவ்வேறு நபர்களுடன் அந்தப் பெண் நெருக்கமாக இருக்கும் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்ததால், இது திட்டமிட்ட நோக்கத்தில் செய்யப்பட்டதா அல்லது தனிப்பட்ட வீடியோக்கள் திருடப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்தச் சம்பவம் கேரளாவின் பேருந்து போக்குவரத்து வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பொது இடங்களில் கண்ணியமற்ற முறையில் நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது. தற்போது சிக்கியுள்ள அந்தப் பெண் மற்றும் வீடியோவில் இருந்த நடத்துனர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் அதேசமயம், அந்தப் பெண்ணின் செல்போனில் இருந்த ரகசிய வீடியோக்கள் எப்படி பொதுவெளியில் கசிந்தன என்பது குறித்தும், இதற்குப் பின்னால் ஏதேனும் மிரட்டல் கும்பல் செயல்படுகிறதா என்பது குறித்தும் சைபர் க்ரைம் போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.