தமிழக அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை குறித்த புதிய சட்ட திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

அதாவது  நீதிமன்ற உத்தரவின்படி, அரசுப் பதவிகளுக்குப் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பது இந்த மசோதா மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள், குறிப்பிட்ட காலியிடங்களுக்குப் பதவி உயர்வு அல்லது மாற்றம் கோரி விண்ணப்பிக்கும்போது மட்டுமே அத்தகைய முன்னுரிமையைப் பெற முடியும்.
நிர்வாக நடைமுறைகளைச் சீர் செய்யவும், தகுதியான தமிழ் வழி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் நீதி கிடைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது