உலகிலேயே மிகவும் அபாயகரமான பாம்புகளில் ஒன்றான கிங் கோப்ரா எனப்படும் ராஜநாகத்தை நபர் ஒருவர் வெறும் கையால் பிடித்து அந்தரத்தில் தூக்கும் அதிரடி காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காட்டில் தப்பி ஓட முயன்ற அந்தப் பாம்பின் வாலைப் பிடித்து இழுத்த அந்த நபர், பின்னர் அதன் உடலைப் பிடித்து உயரே தூக்கியபோது அந்த ராஜநாகம் தனது படமெடுத்து ஆக்ரோஷமாக நின்றது.
View this post on Instagram
அந்தப் பாம்பைத் தரையில் விட்ட அடுத்த விநாடியே அது மின்னல் வேகத்தில் அந்த நபரைத் தாக்க முயன்ற நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாகப் பின்வாங்கி உயிர் தப்பினார். எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி உயிரைப் பணையம் வைத்துச் செய்யப்பட்ட இந்தச் செயல் இணையவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், வனவிலங்குகளை இவ்வாறு கையாள்வது சட்டப்படி குற்றம் என்றும் இது போன்ற ஆபத்தான முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
