உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா அருகே நடைபெற்ற திருவிழாவில், பெண்கள் இரு பிரிவினராகப் பிரிந்து ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜரௌலா கோட்வாலி பகுதியில் உள்ள பிஜௌரா கிராமத்தில் நடைபெற்ற அந்தச் சந்தையில், பொருட்கள் வாங்குவது தொடர்பாகப் பெண்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
अमरोहा के बिजौरा गांव में लगे मेले में महिलाओं के दो गुटों के बीच जमकर मारपीट हुई। सामान खरीदते समय हुए विवाद में लगभग आधा दर्जन दबंग महिलाओं ने एक अकेली महिला को घेरकर उसके बाल पकड़कर, चप्पलों और थप्पड़ों से बुरी तरह पीटा। मारपीट का वीडियो सोशल मीडिया पर वायरल।#Amroha… pic.twitter.com/1sy9eDsBtH
— NBT Hindi News (@NavbharatTimes) January 22, 2026
இது கைக்கலப்பாக மாறிய நிலையில், பெண்கள் ஒருவரையொருவர் கைகளால் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். ஒரு பெண்ணைச் சுற்றி வளைத்து பல பேர் அடிக்கும் இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் போலீசார் இருந்தபோதிலும், இந்த மோதலின் போது அவர்கள் யாரும் அங்கு இல்லாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
