ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில், உணவு ஊழியர் ஒருவர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் உணவு சேகரிப்பு மையத்தில், டிங்கு உள்ளிட்ட ஸ்விக்கி ஊழியர்கள் காத்திருந்தனர் அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று டிங்குவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனை டிங்கு தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், மீண்டும் தனது காரை எடுத்து வந்து அங்கிருந்த ஊழியர்கள் மீது ஏற்ற முயன்றார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில் அவர் மீது மீண்டும் அந்த நபர் பலமுறை காரை ஏற்றி, இறக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விபத்தில் தீவிர காயமடைந்த டிங்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவத்தில் ஈடுபட்டவர். அரசு ஆயுர்வேத மருத்துவரான நவீன் யாதவ் என்பது தெரியவந்தது, தற்போது போலீசார் அவரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.