அதிமுக முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை இன்று (புதன்கிழமை) ராஜினாமா செய்தார்.

அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதியாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைய முடிவெடுத்துள்ளார்.

இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய வைத்திலிங்கம், இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைகிறார். டெல்டா மாவட்ட அரசியலில் முக்கியப் புள்ளியாகக் கருதப்படும் இவரது இந்த அதிரடி மாற்றம், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.