மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு சாலையின் அவல நிலை குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பகீர் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஜிஎஸ்டி (GST), சாலை வரி, வருமான வரி எனப் பல வரிகளைச் செலுத்தும் தங்களுக்குச் சரியான சாலை வசதிகள் இல்லை என மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அந்தச் சாலையில் உள்ள அபாயகரமான வேகத்தடையைத் தாண்டும்போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் படும் இன்னல்கள் அந்த வீடியோவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது.
Dear CM @Dev_Fadnavis ji @nitin_gadkari ji
All these tax payers of Nagpur have paid for E20 Fuel, Road Tax, Income Tax, GST & Health Cess.
My question to you is – Who will pay for their spine? 🥺🙏🔔
On behalf of Tax Payers,#FI pic.twitter.com/2evld7ivzT
— Fundamental Investor ™ 🇮🇳 (@FI_InvestIndia) January 19, 2026
இந்த வீடியோவை ஒரு நெட்டிசன் எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்து, “நாங்கள் சாலை வரி, வருமான வரி மற்றும் பிற வரிகளைச் சரியாகச் செலுத்துகிறோம். ஆனால், இவ்வளவு மோசமான வேகத்தடைகளால் பாதிக்கப்படும் மக்களின் முதுகு எலும்பு பாதிப்பிற்கு யார் பொறுப்பு?” என முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை நேரடியாகக் கேள்வி கேட்டுள்ளார். வண்டிகள் துள்ளிக்குதித்து விழும் இந்தக் காட்சி, வரி செலுத்தும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
