மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் ரயில் நிலையத்தில் தவறவிட்ட கைபேசியை மீட்டெடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த இளைஞரின் மனிதாபிமானச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. ரகு அஹிர்வார் என்ற இளைஞரின் சகோதரிக்கு ரயில் நிலையத்தில் ஒரு கைபேசி கிடைத்துள்ளது.
View this post on Instagram
அந்த கைபேசியில் கடவுச்சொல் பாதுகாப்பு இல்லாததை அறிந்த ரகு, உடனடியாக அதில் இருந்த அழைப்புப் பட்டியலைச் சோதித்து ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். அது கைபேசியைத் தவறவிட்ட பெண்ணின் உறவினர் என்பது தெரியவரவே, பதற்றத்துடன் நிலையத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து ரகு கைபேசியை ஒப்படைத்தார்.
தனது விலைமதிப்பற்ற கைபேசி மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் அந்தப் பெண் கண்ணீர் மல்க அந்த இளைஞருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளையும் ஆசிகளையும் தெரிவித்தார். இந்த நெகிழ்ச்சியான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
