சமூக வலைதளங்களில் அன்றாட வேலைகளை எளிதாக்க மக்கள் கையாளும் புதுமையான ‘ஜுகாட்’ நுட்பங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெண் ஒருவர் பூரிகளை மிக விரைவாக பொரித்தெடுக்க ஒரு விசித்திரமான முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் பொதுவாக பூரிகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு எடுப்பதற்கு அதிக நேரமாகும் என்பதால், அவர் ஒரு நூலில் பல பூரிகளை ஒன்றாகக் கோர்த்து, அவற்றை ஒரே நேரத்தில் சூடான எண்ணெயில் விட்டு பொரித்தெடுக்கிறார். இந்த முறையில் பூரிகள் அனைத்தும் ஒரே சீராக வெந்து வருவதுடன், நேரமும் மிச்சமாவதாக அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
View this post on Instagram
“>
இதனால் ரச்சனா என்ற பெண்ணால் பகிரப்பட்ட இந்த வீடியோ, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் இந்த ‘நூல் ஜுகாட்’ முறையை மிகவும் புத்திசாலித்தனமானது என்றும், அதிகப்படியான விருந்தினர்கள் வரும்போது இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் பாராட்டி வருகின்றனர்.
இருப்பினும், மற்றொரு தரப்பினர் சூடான எண்ணெயில் நூலைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்றும், உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியிருந்தாலும், சமையல் அறையில் நேரத்தை மிச்சப்படுத்த அந்தப் பெண் கையாண்ட இந்த நூதன முயற்சி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
