தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி உடனடியாக சென்சார் சர்டிபிகேட் கொடுக்க உத்தரவிட்ட நிலையில் சென்சார் வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்த நிலையில் பட குழுவின் அவசரத்திற்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது எனவும் சென்சார் வாரியத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதிகள் கூறிய நிலையில் இன்று வழக்கம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் படக்குழு மற்றும் சென்சார் வாரியம் தங்களது வாதங்களை முன்வைத்த நிலையில் அதனைக் கேட்ட தலைமை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார். மேலும் முன்னதாக உச்சநீதிமன்றத்தில் பட குழு வழக்கு தொடர்ந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு இருப்பதை காரணம் காட்டி நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
