2026 டி20 உலகக் கோப்பைக்கு அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் ஒரு அதிரடி முடிவை எடுக்கத் தயாராகி வருகிறார்.

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவுஃபை உலகக் கோப்பை அணியில் சேர்க்க ஹெசன் ஆர்வம் காட்டவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்குக் காரணம், ஹாரிஸ் ரவுஃப் அவ்வப்போது வாரி வழங்கும் ரன்கள் தான் எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, 2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா, ரவுஃபின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

அந்தப் போட்டியில் ரவுஃப் ரன்களை வாரி வழங்கியது பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால் தான், தந்திரமான முடிவுகளை எடுப்பதில் வல்லவரான மைக் ஹெசன், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ரவுஃபை நம்பத் தயாராக இல்லை எனத் தெரிகிறது.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரிலும் அவர் ஓரம் கட்டப்பட்ட நிலையில், இப்போது உலகக் கோப்பை அணியிலும் அவருக்கு இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.