அமெரிக்காவில் பிரசவ அறைக்குள் கணவர் ஒருவர் விளையாட்டுக் கருவியுடன் அமர்ந்து கணினி விளையாட்டில் மூழ்கியிருந்த காணொளி இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் பிரசவ அறையில் தனது மனைவிக்கு குழந்தை பிறக்கக் காத்திருந்த தருணத்தில், அங்கேயே ஒரு மேசையை அமைத்துத் தனது விளையாட்டுக் கருவி மற்றும் கணினித் திரையுடன் அவர் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Little Letters Linked (@littleletterslinked)

செவிலியர் குழந்தையைக் கொண்டு வந்து அவரிடம் ஒப்படைத்த போதும், குழந்தையைக் கையில் வாங்கி ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் தனது விளையாட்டைத் தொடர்ந்த அந்தத் தந்தையின் செயல் பலரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செயலைப் பார்த்த இணையவாசிகள் பலர், ஒரு குழந்தை பிறக்கும் உணர்ச்சிகரமான தருணத்தில் தந்தையின் இத்தகைய பொறுப்பற்ற போக்கை விமர்சித்துள்ளனர்.

இருப்பினும், பிரசவக் காலத்தில் ஏற்படும் நீண்ட காத்திருப்பு நேரத்தைக் கழிக்க அவர் இவ்வாறு செய்திருக்கலாம் எனச் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.