இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களால் தயக்கம் காட்டி வருகிறது. வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் மைனாரிட்டி மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து முஸ்தபிஜூர் ரகுமான் விடுவிக்கப்பட்டார்.
இத்தகைய சூழலில் இந்தியாவில் விளையாடுவது தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்காது எனக் கருதும் வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்தியா வருவதற்குப் பதிலாகத் தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக் கோரி ஐசிசி குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போது வங்கதேச அணி ‘சி’ பிரிவில் உள்ளதால் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட வேண்டியுள்ளது. எனவே, தங்களை இலங்கை மற்றும் பல்லேகலேயில் போட்டிகள் நடைபெறும் ‘பி’ பிரிவிற்கு மாற்றினால், இந்தியாவில் விளையாடுவதைத் தவிர்க்கலாம் என வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது.
இருப்பினும், வங்கதேச அணி திட்டமிட்டபடி இந்தியாவில்தான் விளையாட வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தி வருவதால், இது தொடர்பான இறுதி முடிவை எடுக்க ஐசிசி பிரதிநிதிகள் வங்கதேச வாரியத்துடன் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
