அண்டர்-19 உலகக்கோப்பையில் இந்தியா – வங்கதேசம் மோதிய ஆட்டத்தில், 14 வயதே ஆன இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் வரலாற்றைப் படைத்துள்ளார்! வெறும் 14 வயது 296 நாட்களில் அரைசதம் அடித்து, ஆடவர் அண்டர்-19 உலகக்கோப்பை வரலாற்றிலேயே 50 ரன்களுக்கு மேல் எடுத்த மிக இளவயது வீரர் என்ற உலக சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஷாஹித் உல்லா ஆகியோர் வைத்திருந்த சாதனைகளை இந்தச் சிறுவன் அசால்ட்டாக முறியடித்தது கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது. 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தாலும், களத்தில் அவர் காட்டிய அதிரடியும் முதிர்ச்சியும் “இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம்” என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

​இந்த வரலாற்றுச் சாதனை ஒருபுறம் இருக்க, களத்தில் வங்கதேச வீரர் ஜவாத் அப்ரார் மற்றும் வைபவ் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ தற்போது இணையத்தில் அனல் பறந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாகப் பார்த்துக் கொண்டதும், வார்த்தைகளால் மோதிக் கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது ஆட்டத்தால் மட்டுமல்லாமல், வங்கதேச வீரர்களின் ஸ்லெட்ஜிங்கிற்கு (Sledging) அஞ்சாமல் பதிலடி கொடுத்த வைபவ்வின் இந்த “கெத்து” தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. சாதனையோடு சேர்த்து வீரத்தையும் காட்டிய இந்த வைபவ், இப்போது இணையத்தின் வைரல் நாயகன்