சமூக வலைதளங்களில் வைரல் வீடியோக்களுக்கான மோகம் இளைஞர்களைத் தாண்டி தற்போது முதியவர்களிடமும் அதிகரித்து வரும் நிலையில், பனி மூடிய மலைப்பகுதிகளில் முதிய தம்பதியினர் பாலிவுட் பாடலுக்கு மிக உற்சாகமாக ரீல்ஸ் செய்துள்ள வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
அழகான பனி படர்ந்த பள்ளத்தாக்கில், குளிரைத் தாங்கும் கம்பளி உடைகளை அணிந்தபடி, அந்தத் தாத்தா தனது பாட்டியுடன் இணைந்து பாலிவுட் காதல் பாடலுக்கு அபாரமாகத் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் நீண்ட கால பந்தத்தையும், முதுமையிலும் குறையாத காதலையும் பறைசாற்றும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ, காண்போர் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளி இதுவரை 49 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதோடு, வாழ்க்கைப் பயணம் ஒரு துணையுடன் அமையும் போது எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதற்குச் சான்றாக விளங்குவதாக நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
