சமூக வலைதளங்களில் வைரல் வீடியோக்களுக்காகப் பலரும் விபரீதமான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரு நபர் உணவைப் போலக் கண்ணாடி பாட்டிலைச் மென்று தின்னும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளியில், ஒரு நபர் தனது தட்டில் உணவிற்குப் பதிலாகக் கண்ணாடித் துண்டுகளை வைத்துக்கொண்டு அவற்றை எவ்வித தயக்கமும் இன்றி சாதாரணமாக மென்று விழுங்குகிறார்.
View this post on Instagram
பார்ப்பதற்குக் கண்ணாடி போன்ற இனிப்பினால் செய்யப்பட்ட பொருளை உண்பது போலத் தோன்றினாலும், அதன் ஆபத்தை உணராமல் வெறும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இத்தகைய செயலில் அவர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருவதுடன், இது போன்ற ஆபத்தான செயல்களை யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்து வருகின்றனர்.
மருத்துவ ரீதியாக இத்தகைய செயல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
