அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியின் கூட்டணி குறித்து மிகவும் நிதானமாகவும் பண்பாகவும் பதில் அளித்துள்ளார். “நாங்கள் யாருடன் கூட்டணி சேரப்போகிறோம் என்பதை அந்தக் கூட்டணியின் தலைமைதான் முறைப்படி அறிவிக்க வேண்டும்; அதுவே சரியான பண்பு” என்று அவர் கூறியுள்ளார். தான் ஒரு கூட்டணிக்குத் தலைமை தாங்கினால் அதைத் தானே அறிவிப்பேன் என்றும், ஆனால் ஒரு பெரிய கூட்டணியில் இணையும்போது அந்தத் தலைமைக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்லும் வரை காத்திருப்பதே முறை என்றும் அவர் அழகாக விளக்கியுள்ளார்.
”கூட்டணி குறித்து அவர்கள் அறிவித்த பிறகு உங்களுக்கேத் தெரியவரும்” என்று டிடிவி தினகரன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தான் சேரும் கூட்டணியின் கௌரவத்தைக் குறைக்காமல், அதே சமயம் தனது முடிவில் உறுதியாக இருப்பதையும் அவரது பேச்சு உணர்த்துகிறது.
அவங்களே சொல்லுவாங்க…. “தலைமைக்குத் தரும் மரியாதை” – கூட்டணியைப் பற்றி தினகரன் கொடுத்த ட்விஸ்ட்….!!
Related Posts
“திமுக-காங்கிரஸ் இடையே விரிசல்?” புதுச்சேரி தோல்விக்கு யார் காரணம்? திமுகவின் குற்றச்சாட்டுக்கு கிரிஷ் சோடங்கர் கொடுத்த பதிலடி..!!”
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற அரசியல் விவகாரக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், புதுச்சேரியைப் பொறுத்தவரை தவெகவிடமிருந்தோ அல்லது உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியிடமிருந்தோ கூட்டணி குறித்து…
Read moreஅடுத்தது மதிமுகவா?” பதவி ஆசைக்காகப் பிரிந்தார்கள்!” திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய முஸ்லீம் லீக்.. ஆர்.எஸ். பாரதியின் பகீர் குற்றச்சாட்டு..!!”
திமுக கூட்டணியிலிருந்து முஸ்லீம் லீக் விலகியது குறித்துப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இந்தத் தேர்தல் தங்களுக்கு யார் உண்மையான நண்பர்கள், யார் சந்தர்ப்பவாதிகள் என்பதைத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முஸ்லீம் லீக் கட்சி தவெக அமைச்சரவையில்…
Read more