உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து வருவதாகச் சொல்லப்பட்டாலும், மறுபக்கம் பழங்குடியின மக்களின் நிலை இன்னும் கற்காலத்திலேயே இருப்பது போன்ற ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போதிய சாலை வசதியோ அல்லது ஆம்புலன்ஸ் வசதியோ இல்லாததால், கர்ப்பிணிப் பெண் ஒருவரை ஒரு துணியில் கட்டி, கம்பில் தொங்கவிட்டு (காவடி போல) சுமந்து செல்லும் அவலம் நேர்ந்துள்ளது. “பழங்குடியினருக்கு ஆம்புலன்ஸ் இல்லையா?” என்ற கேள்வியோடு இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
"No ambulance for tribals." 💔
This is the condition of world's 4th largest economy, India, where kanwar (pole) is the ambulance for pregnant tribal women. pic.twitter.com/1BDDZyJQxW
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) January 16, 2026
ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியா, விண்வெளிப் பயணம் என நாடு முன்னேறிக் கொண்டிருந்தாலும், அடிப்படை மருத்துவ வசதி கூட கிடைக்காமல் காடுகளிலும் மலைகளிலும் மக்கள் படும் இந்தத் துயரம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணை இப்படி ஆபத்தான முறையில் சுமந்து செல்வது நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் உள்ள ஓட்டைகளைத் தோலுரித்துக் காட்டுகிறது என நெட்டிசன்கள் பலரும் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
