தலைவலியைத் தீர்க்க வீட்டு வைத்தியம் செய்வது வழக்கம் தான், ஆனால் அதுவே வினையாக முடிந்தால்? கிழக்கு சீனாவைச் சேர்ந்த 50 வயது பெண் லியு, தனக்கு நீண்ட நாட்களாக இருந்த ஒற்றைத் தலைவலியை (Migraine) குணப்படுத்த மீனின் பித்தப்பையைச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையை நம்பியுள்ளார்.

உள்ளூர் சந்தையில் 2.5 கிலோ எடையுள்ள ‘கிராஸ் கார்ப்’ (Grass Carp) என்ற மீனை வாங்கி, அதன் பித்தப்பையைத் தனியாக எடுத்து பச்சையாக விழுங்கியுள்ளார்.

ஆனால், அடுத்த 2 மணி நேரத்திலேயே கடும் வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பதறிப்போன குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.