அமெரிக்காவைச் சேர்ந்த ‘GRU Space’ என்ற நிறுவனம், நிலவில் உலகின் முதல் ஹோட்டலை அமைக்கும் அதிரடியான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ஹோட்டலுக்கான கட்டுமானப் பணிகள் 2029-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2032-ஆம் ஆண்டிற்குள் முழுமையாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த ஹோட்டல் பூமியிலேயே முழுமையாகக் கட்டப்பட்டு, பின்னர் விண்கலம் மூலமாகப் பத்திரமாக நிலவுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.

​நிலவில் ஒரு விண்வெளி வீரரைப் போலத் தங்க ஆசைப்படுபவர்கள், இதற்காக சுமார் 90 லட்சம் முதல் 91 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அங்கு தங்க விரும்புபவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. விண்வெளிச் சுற்றுலாவில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகும் இந்தத் திட்டம், தற்போது உலகெங்கிலும் உள்ள பயணப் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.