அன்பிற்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உண்டு என்பதை அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த காசி என்ற பெண்ணின் கதை நிரூபிக்கிறது. 2011 ஆம் ஆண்டு ‘மை ஸ்ட்ரேஞ்ச் அடிக்ஷன்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இவரது பழக்கம் உலகையே அதிச்சியில் ஆழ்த்தியது.

தனது கணவர் ஆஸ்துமாவால் திடீரென இறந்த பிறகு, அந்த இழப்பைத் தாங்க முடியாத காசி, அவரது அஸ்தி அடங்கிய கலசத்தை எப்போதும் தன்னுடன் வைத்திருந்தார். ஒருமுறை எதிர்பாராத விதமாக கையில் ஒட்டிய கணவரின் சாம்பலை நக்கிப் பார்த்த அவருக்கு, அது நாளடைவில் ஒரு தீவிரமான போதைப் பழக்கமாக மாறியது. அந்தச் சாம்பல் அழுகிய முட்டையின் சுவையில் இருந்தபோதிலும், தனது கணவர் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அதை உணவில் மசாலா போல தூவி சாப்பிடத் தொடங்கினார்.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by HabitCraft | Mindset and Habits (@habitcraft.co)

“>
மருத்துவ ரீதியாக இது ‘பிகா’ (Pica) எனப்படும் ஒருவகை உணவுக் கோளாறாகும்; இதில் மனிதர்கள் மண், முடி, காகிதம் அல்லது சாம்பல் போன்ற சத்து இல்லாத பொருட்களைச் சாப்பிட விரும்புவார்கள். காசியின் இந்த விசித்திரமான செயல் அவரது உடல் நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. தகனம் செய்யப்பட்ட சாம்பலில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சு இரசாயனங்கள் இருப்பதால், இது உயிருக்கே ஆபத்தானது என்று மருத்துவர்கள் அப்போதே எச்சரித்தனர். கணவர் மீதான அதீத காதலால் உருவான இந்த விசித்திரமான பழக்கம், மன ரீதியான பாதிப்புகள் ஒரு மனிதனை எந்த எல்லைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு ஒரு வேதனையான உதாரணமாக இன்றும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.