உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில், திருமணமான 20 நாட்களில் ஒரு இளம்பெண் தனது கணவரின் சகோதரனாலேயே (கொழுந்தன்) பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், ஜனவரி 1-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்த நபர் இந்த அக்கிரமத்தைச் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் அழுது புலம்பி நீதி கேட்டபோது, “வெளியில் சொன்னால் தற்கொலை செய்துகொள்வேன்” என கணவன் மிரட்டி அந்தப் பெண்ணின் வாயை அடைத்துள்ளார்.
கணவனின் மிரட்டலால் சில காலம் அமைதி காத்த அந்தப் பெண், பின்னர் துணிச்சலுடன் புகார் அளிக்க முயன்றபோது கணவன், மாமியார் மற்றும் கொழுந்தன் ஆகிய மூவரும் சேர்ந்து அவரைத் தாக்கி மிரட்டியுள்ளனர். இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் இறுதியில் அந்தப் பெண் காவல்நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார். தற்போது பாராதரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக அவமானத்திற்குப் பயந்து முதலில் அமைதியாக இருந்த அந்தப் பெண், இப்போது குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
