தமிழிசை சௌந்தரராஜன் இன்று யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை, மாநிலத்தின் அரசியலிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஆந்திராவைப் போல தமிழகத்திலும் ‘டபுள் இன்ஜின்’ ஆட்சி அமைந்தால் மட்டுமே உண்மையான வளர்ச்சி சாத்தியம் என்றும், தற்போது பல துறைகளில் தமிழகம் பின்தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

​விஜய் மீதான சிபிஐ விசாரணை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது முக்கியத்துவத்தைக் காட்டிக்கொள்ளவே பாஜக மீது பழி போடுகிறார் என்றார். “சிபிஐ விசாரணைக்கு பாஜக தான் காரணம் என்று விஜய்யோ அல்லது அவரது ரசிகர்களோ சொல்லவில்லை; ஆனால் செல்வப்பெருந்தகை மட்டும் இடையில் புகுந்து குளிர்காய நினைக்கிறார்” என்று தமிழிசை சாடினார். மேலும், எச்.ராஜா கைது செய்யப்பட்டதைக் கண்டித்த அவர், இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு பாரபட்சமாக நடப்பதாகக் குற்றம் சாட்டினார்.