ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில், ‘Lewisia Wellness’ நிறுவனத்தின் நிறுவனர் மனோஜ் தாஸ் கலந்துகொண்டார். இவர் ஒரு அரோமாதெரபிஸ்ட் (Aromatherapist) மற்றும் இயற்கை சிகிச்சையாளர் மட்டுமே, ஆனால் தன்னை ‘டாக்டர்’ என்று அழைத்துக்கொண்டார்.

இதைக் கவனித்த நடுவர் அனுபம மிட்டல், “அரோமாதெரபி படித்தால் டாக்டர் என்று பெயர் போட முடியாது, இது தவறானது மற்றும் ஆதாரமற்றது,” என்று கடுமையாக சாடினார்.
<a href="http://

“>
மேலும், “உங்களின் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாகவே உங்கள் வியாபாரம் நடக்கிறது, ஆனால் சட்ட ரீதியான ஆய்வில் நீங்கள் நிச்சயம் சிக்கிக்கொள்வீர்கள்,” என்றும் அவர் மனோஜ் தாஸை எச்சரித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. மக்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பியதால், மனோஜ் தாஸ் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் (bio) இருந்த ‘டாக்டர்’ என்ற வார்த்தையை இப்போது நீக்கிவிட்டார்.

இருப்பினும், அவரது ஃபேஸ்புக் பக்கத்தின் பெயரில் இன்னும் ‘Dr Manoj Das’ என்றே உள்ளது குறிப்பிடத்தக்கது.