உயரமான கட்டிடங்களில் கயிற்றில் தொங்கியபடி பெயிண்ட் அடிப்பவர்களைப் பார்த்தாலே நமக்கெல்லாம் தலைசுற்றும். ஆனால், பீகாரைச் சேர்ந்த ஒரு பெயிண்டர் கூலாக வேலை செய்துகொண்டே அளித்த பேட்டி இப்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பயனர் சானியா மிர்சா என்பவர் அந்த வாலிபரிடம் பேசும் வீடியோவில், “இந்த கயிறு இடுப்பை வலிக்கவில்லையா? நிறைய சம்பாதிப்பீர்கள் போல” என்று கிண்டலாகக் கேட்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Saniya Mirza (@saniya.mirzzaa)

அதற்கு அந்த வாலிபர் சிரித்துக்கொண்டே, “பெயிண்ட் அடிப்பது மூலம் எனக்கு மாதம் 35,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. நானும் ஒரு பட்டதாரி (Degree) தான். என் சகோதரர் ராணுவத்திலும், சகோதரி பீகார் காவல்துறையிலும் பணிபுரிகிறார்கள்” என்று கூறி அதிரவைத்தார்.

அதுமட்டுமல்ல, அவர் ஒரு விவசாயியும் கூட! ஊரில் உள்ள தனது கரும்புத் தோட்டம் மூலம் மட்டும் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் லாபம் பார்ப்பதாக அவர் கூறியதைக் கேட்டு சானியா மிர்சா மிரண்டு போனார்.

“டிகிரி முடித்துவிட்டு கௌரவம் பார்க்காமல் கடின உழைப்பை நம்பும் இவர்தான் உண்மையான ஹீரோ” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.