பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி பிரமாண்டமாக களை கட்டியது. திருமண கொண்டாட்டங்களுக்கு பிறகு மணமகன் மணமகள் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டில் இருந்து திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறிய நிலையில் இந்த பயங்கர விபத்தில் மணமகன் மணமகள் உட்பட கிட்டத்தட்ட 8 பேர் உயிரிழந்தனர். எல்பிஜி சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..