கபடி வீராங்கனையான கே.எஸ்.ஐஸ்வர்யா, தனது கடின உழைப்பால் தற்போது சினிமாவில் நடிகையாக வளர்ந்து வருகிறார். தமிழ்நாட்டிற்காகப் பல கபடி போட்டிகளில் விளையாடிய இவர், கொரோனா காலத்தில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி திரைத்துறையில் நுழைந்தார்.

சமீபத்தில் வெளியான ‘ஜஸ்டிஸ் பார் ஜெனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இவர், தற்போது நடிகர் நட்ராஜுக்கு ஜோடியாகப் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா, தான் சிறுவயது முதலே நடிகை நயன்தாராவின் தீவிர ரசிகை என்று கூறியுள்ளார். தான் நடிக்க வந்தபோது பலரும் தன்னை ‘ஆரம்ப கால நயன்தாரா’ போலவே இருப்பதாகக் கூறியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

நயன்தாராவைப் போலவே உழைப்பால் உயர்ந்த இடத்தைப் பிடிக்க விரும்புவதாகவும், வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.