உ.பி. மாநிலம் பலியாவைச் சேர்ந்த சூரஜ் கோட் (24) என்பவரும், அவரது மைனர் நண்பரும் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தனர்.
விந்தை என்னவென்றால், தாங்கள் இருவரும் காதலிப்பது ஒரே பெண்ணைத்தான் என்பது அந்த நண்பர்கள் இருவருக்குமே தெரியவில்லை. அந்தப் பெண்ணோ, இருவரிடமும் ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து “டபுள் கேம்” ஆடி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தங்களின் காதலி தங்களை ஏமாற்றுவதை அறிந்த சூரஜ், அந்தத் துரோகத்தைத் தாங்க முடியாமல் விஷம் குடித்தார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது நண்பனின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு நண்பரும் விஷம் குடித்தார். தற்போது அவர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே பெண்ணுக்காக இரண்டு நண்பர்கள் விஷம் குடித்த சம்பவம் அந்தப் பகுதியில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், போலீஸார் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
