சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் நின்றுகொண்டு ஒரு நபர், “இது முதல் தளம் என்றுதானே நினைக்கிறீர்கள்?” எனக் கேட்கிறார். ஆனால், அவர் கேமராவைக் கீழே திருப்பிக் காண்பித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உண்மையில் அந்தத் தளம் தரையிலிருந்து பல நூறு அடி உயரத்தில், ஒரு மலை முகட்டின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்தது.

மேலும் கீழே பார்த்தால் ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு ஆழமான பள்ளமும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியும் காட்சியளிக்கின்றன. பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரிந்தாலும், அந்த இடத்தின் பிரம்மாண்டமும் ஆபத்தும் மக்களை வியப்படையச் செய்துள்ளது. ஊடகம் வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த இணையவாசிகள் தங்களது கலவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Traveler (@chongqing002)

“>

இந்நிலையில் சிலர் அந்த இடத்தின் அழகைப் பார்த்து வியந்தாலும், பலர் இவ்வளவு உயரத்தில் வசிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சுட்டிக்காட்டி அச்சம் தெரிவித்துள்ளனர். “கட்டடக் கலையின் அதிசயம்” என ஒரு தரப்பினரும், “உயிருக்கே பயமாக இருக்கிறது” என மற்றொரு தரப்பினரும் விவாதித்து வருவதால், இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.