சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மொழிப் போர் மற்றும் இந்தி எதிர்ப்பு குறித்த வசனங்கள் இந்தப் படத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
தணிக்கைக் குழுவால் அண்ணாவின் வசனங்கள் உள்ளிட்ட சில பகுதிகள் நீக்கப்பட்டாலும், இளைஞர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தன் குடும்பத்துடனும், ரவி மோகன் மற்றும் நடிகை ஷாலினி ஆகியோருடனும் தியேட்டரில் அமர்ந்து கண்டு ரசித்தனர்.
தியேட்டரில் செய்தியாளர்களைச் சந்தித்த ரவி மோகன், “சினிமாவுக்கு மொழி கிடையாது, எமோஷன் தான் முக்கியம்; அது இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போவது குறித்த கேள்விக்கு, “தம்பிகளைப் போகவிட்டுருக்காரு, அண்ணன் சீக்கிரமா வந்துடுவார்” என ரவி மோகன் கலகலப்பாகப் பதிலளித்தார்.
‘அமரன்’ படத்தை விட இது நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுவது தங்களுக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
