“துப்பாக்கி” படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், “பில்லா 2” படத்தில் அஜித்துக்கு சவாலாகவும், “அஞ்சான்” படத்தில் சூர்யாவின் உயிர் நண்பனாகவும் நடித்தவர் வித்யூத் ஜாம்வால்.

கட்டுமஸ்தான உடலமைப்பிற்குச் சொந்தக்காரரான இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலில் ஒரு துணிகூட இல்லாமல் நிர்வாணமாக மரம் ஏறி, இறங்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அவர் எதற்காக இப்படிச் செய்தார் என்ற விளக்கத்தையும் அளித்துள்ளார்.

தற்காப்பு கலையான களரிப்பயட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக ‘சஹஜ யோகா’ எனும் பயிற்சியை ஆண்டுதோறும் மேற்கொள்வதாகவும், அதற்காகவே இப்படி இயற்கையோடு இணைந்து மரம் ஏறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vidyut Jammwal (@mevidyutjammwal)

“இயற்கையுடன் மனதை ஆழமாக இணைக்கவும், நரம்புகளைத் தூண்டி மன அமைதி பெறவும் இந்தப் பயிற்சி உதவும்” என அவர் அறிவியல் ரீதியான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

தற்காப்புக் கலைகளில் ஆர்வம் கொண்ட வித்யூத், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டை உலகம் முழுவதும் கொண்டு செல்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது இந்த ‘நிர்வாண மரம் ஏறும்’ வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.