சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நாந்துகாவ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் (Dental College), மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் செத்த தவளை கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விடுதி உணவகத்தில் (Mess) அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் முழுவதும் சொல்ல முடியாத அளவிற்கு அசுத்தமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

​சோதனையின் போது, காலாவதியான (Expiry Date) உணவுப் பொட்டலங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டன. மாணவர்களின் உயிருடன் விளையாடும் வகையில் இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்ட மெஸ் நிர்வாகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மெஸ்ஸை நடத்தி வரும் தனியார் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. வருங்கால மருத்துவர்களாகப் படிக்க வேண்டிய மாணவர்களுக்கே இப்படி ஒரு நிலைமையா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.