சீனாவில் உள்ள 20 மாடி அடுக்குமாடி குடியிருப்பில், ஆறாவது மாடியில் வசிக்கும் நபர் ஒருவர், தனது வீட்டின் ஜன்னல் வழியே தெரியும் காட்சியை மறைக்கிறது என்பதற்காக அங்கிருந்த ஒரு மிக முக்கியமான கட்டிடத் தூணைக் (Structural Column) வெட்டி அகற்றியுள்ளார். அந்தத் தூணில் மிகக் குறைவான மற்றும் பலவீனமான இரும்பு கம்பிகளே இருந்ததால், அதனை மிக எளிதாக வெட்டி எடுத்துவிட்டனர். ஒரு மாபெரும் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் தூணையே இப்படி அறிவில்லாமல் வெட்டியது அங்கிருந்த மற்ற குடியிருப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
🇨🇳 In a 20-story apartment building in China, a resident on the 6th floor cut through a structural column to improve the view.
Since it only had a few very weak reinforcing panels, it was very easy to just cut right through. Extremely dangerous. pic.twitter.com/eJYP5OKabN
— 鈴森はるか 『haruka suzumori』 🇯🇵 (@harukaawake) January 9, 2026
இந்தச் செயல் அந்தக் கட்டிடம் முழுவதற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. தூண் என்பது கட்டிடத்தின் எடையைச் சுமக்கும் ஒரு முக்கியமான உறுப்பு; அதனை அகற்றுவது கட்டிடத்தின் சமநிலையைக் குலைத்து, அது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தை (Extremely Dangerous) உருவாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த நபரின் முட்டாள்தனமான செயலால் ஒட்டுமொத்த குடியிருப்பும் தற்போது மரண பயத்தில் உள்ளது.
