கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஜனவரி 4-ஆம் தேதி காலை நடந்த சாலை விபத்து ஒன்றில், கார் ஓட்டுநரின் மின்னல் வேகச் செயல்பாட்டால் முதியவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

காசர்கோடு அருகே உள்ள மஞ்சலம்கோடு பகுதியில், தனியார் பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டி, நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாகச் சாலையின் நடுவே விழுந்தார்.
<a href=”http://

“>
அதே தருணத்தில் எதிரே அதிவேகமாக வந்த கார், அவர் மீது மோதும் எனக் கருதப்பட்ட நிலையில், காரை ஓட்டி வந்த முகேஷ் பாஸ்கரன் என்பவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காரை இடதுபுறமாகச் சட்டெனத் திருப்பினார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த சுற்றுச்சுவர் மீது மோதி பலத்த சேதமடைந்த போதிலும், சாலையில் விழுந்த முதியவர் ஒரு சிறு காயமுமின்றி உயிர் தப்பினார்.

விபத்தின் திக் திக் காட்சிகள் அங்கிருந்த காரின் டேஷ்கேமில் (Dashcam) பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டியைக் காப்பாற்றத் தனது காரையே தியாகம் செய்த ஓட்டுநரின் மனிதாபிமானத்தை இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.